PM Narendra Modi | USA Maryland Living Raghavendra (Photo Credit: ANI)

ஜூன் 17, மரிலேண்ட் (United States Of America): அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவுக்கு (America) ஜூன் 21 முதல் ஜூன் 24 வரையிலான 3 தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா, மரிலாண்ட் (Maryland, USA) பகுதியில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர் ராகவேந்திரா, பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகுந்த பற்றுகொண்டவர் ஆவார். பிரதமரின் பல திட்டங்களை அறிந்து அவரின் பால் அன்பு கொண்ட ராகவேந்திரா, தனது வாகனத்திற்கு NMODI என அடையாள பதிவெண்ணும் பெற்றுள்ளார். Suman About Sivaji Movie: பெண்கள் என்னை கூப்பிட்டு பாராட்டினார்கள் – சிவாஜி படத்தில் நடித்த அனுபவம் குறித்து கலகலப்பாக மனம் திறந்த சுமன்..!

இந்த விஷயம் குறித்து ராகவேந்திரா தெரிவிக்கையில், "நான் கடந்த 2016 நவம்பர் மாதத்தில் இருந்து NMODI நம்பர் பிளேட்டை வைத்துள்ளேன். நரேந்திர மோடி எனக்கு முன்னுதாரணமாக திகளுகிறார். அவர் எனக்கு மட்டுமல்லாது நமது இந்திய தேசத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். இந்தியாவுக்கும், உலக சமூகத்துக்கும் நன்மை செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

அவர் தற்போது இங்கு வருவதை நாங்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறோம். அவரை வரவேற்க அனைவரும் தயாராக இருக்கிறோம். நானும் தயாராக இருக்கிறேன்" என கூறினார்.