Narendra Modi, Prime Minister of India (Photo Credit: @ANI Twitter)

மே 05, பல்லாரி (Karnataka News): ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரீஸ் (The Kerala Story). கேரளாவில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்மணி பிற மதத்தை சேர்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு வேலை செய்ய நாடுகடத்தி சென்ற நிலையில், அவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதை பற்றிய ஆவண படமாக இது தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் கேரளாவில் இவ்வாறான சர்ச்சைகள் இருந்ததாக அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் குற்றசாட்டை முன்வைக்கின்றன. மேலும், இவ்வகை குற்றத்தோடு லவ் ஜிகாத் என்ற காதல் - மதம்மாற்றத்தையும் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கேரளா ஸ்டோரீஸ் படம் திரையரங்கில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள (Karnataka Assembly Poll 2023) எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்லாரி (Ballari) நகரில் பாஜக சார்பில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இதுகுறித்து பேசினார். அவர் பேசுகையில், "கேரளா ஸ்டோரி திரைப்படம் பயங்கரவாதத்தின் சதிச்செயலை அடிப்படையாக கொண்டது ஆகும். இவை பயங்கரவாதத்தின் கேடுகெட்ட உண்மையை எடுத்துரைக்கிறது. Kanyakumari Girl Death: விபத்தில் சிக்கிய சிறுமியை துள்ளத்துடிக்க தவிக்கவிட்டு கொலை செய்த காதலன்; இன்ஸ்டாகிராம் பைக்கர் கஞ்சா போதையில் வெறிச்செயல்.!

அதேபோல, பயங்கரவாதிகளின் வடிவமைப்பு மற்றும் சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது. இந்த படத்திற்கு தீவிரவாத போக்கோடு காங்கிரஸ் துணை நிற்கிறது. வாக்கு வங்கியை பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்திற்கு அடிபணிவதை கண்டு நான் வியப்படைகிறேன். இப்படியான கட்சி எப்படி கர்நாடக மாநிலத்தை காப்பாற்றும்?. பயங்கரவாத சூழலில் சிக்கி மாநிலத்தின் தொழில், விவசாயம், கலாச்சாரம் ஆகியவை அழிந்துவிடும்.

நமது மாநிலத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவதற்கு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முக்கியம். அதற்கு முதலில் பயங்கரவாதத்திடம் இருந்து கர்நாடகா விடுதலை அடைய வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக பாஜக கடுமையாக இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் காங்கிரசுக்கு வயிறு வலிக்கிறது" என பேசினார்.