Kangana Ranaut (Photo Credit: @KanganaTeam / @BhaktWine X)

ஜூன் 04, மண்டி (Himachal Pradesh News): ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்தியா தேர்தல்கள் 2024 , ஏழுகட்டமாக நடைபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 229 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக - பாமக கூட்டணி 1 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக - தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சி மோதிக்கொள்ளும் விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி இழுபறி நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Suresh Gopi Victory: கேரளா மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது பாஜக; நடிகர் சுரேஷ் கோபி வெற்றி.! 

நடிகை கங்கனா வெற்றி: இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் (Kangana Ranaut) 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங் தோல்வியை அடைந்துள்ளார். தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள எஞ்சிய 3 தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது.