GK Cinemas Porur | Vettri Cinemas Chrompet (Photo Credit: GKCinemas.com / VettriCinemas.com)

ஏப்ரல் 01, சென்னை (Chennai): கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை புகழ்பெற்று இருந்த தமிழ் சினிமா, இன்றளவில் உலக சந்தையில் தன்னை ஈடுகொடுக்க திணறி வருகிறது. தமிழ் திரையுலகில் ஆண்டுக்கு 400 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. இவற்றில் திரைபிரபலங்களின் சிறந்த படம் மட்டுமே மக்களின் நினைவுகளில் இருக்கும். இதனை கணக்கெடுத்தால் 400 படங்களில் குறைந்தது 5 முதல் 20 படங்கள் மட்டுமே மக்கள் பார்த்த படங்களாக இருக்கும்.

பொங்கல் ரிலீஸில் கவனிக்கத்தக்கது: எஞ்சிய திரைப்படங்கள் அனைத்தும் திரைக்கு வந்ததும் தெரியாமல், சென்றதும் தெரியாமல் ஓடிவிடும். இவ்வாறான படங்களில் சில நேரம் ஓடிடியில் வெளியிடப்பட்ட பின்னர் அப்படங்களுக்கு திடீர் வரவேற்பு கிடைக்கும். கடந்த புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின்னரே தமிழில் மக்கள் மனதில் நிற்கும் அளவிலான படங்கள் ஏதும் வரவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இவற்றில் மூன்றும் பொதுவான வெற்றியை அடைந்தது. Police Complaint Against Actress Saranya Ponvannan: கார் நிறுத்தத்திற்கு காட்டுத்தனமான சண்டை.. நடிகை சரண்யா பொண்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..! 

இரவு காட்சிகள் ரத்தான சூழல்: கோடை விடுமுறையை கணக்கில் வைத்து அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக தயார் நிலையில் இருந்தாலும், இடைப்பட்ட மாதங்களில் திரையரங்குக்கு வருவாய், மக்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால் வார இறுதியில் களைகட்டிய திரையரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில மாதமாகவே தொடரும் இவ்வாறான சூழலால், வார இறுதி நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் திரையரங்குகளில் இரவு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

மொழிகளை கடந்து குடும்பம் கொண்டாடும் வெற்றியை அடைந்த மஞ்சும்மேல் பாய்ஸ்: மக்களின் ரசனைக்கேற்ப படம் வெளியாகாதது, அவர்களின் எதிர்பார்ப்பு முந்தைய படங்களில் பூர்த்தியாகாதது உட்பட பல காரணத்தால் மக்களும் திரையரங்கின் பக்கம் செல்லாமல் இருந்தது. இந்நிலையில், மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம், மொழிகளை கடந்து தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று மக்களின் ஆதரவை நல்கியது. அதேபோல, சமீபத்தில் வெளியான காட்ஸில்லா வெர்சஸ் காங் தி நியூ எம்பயர் படமும் வரவேற்பு பெற்றுள்ளது. Thief Steals Bicycle: "என்ன தான் பழைய பொருள திருடுனாலும்.. புதிய டெக்னாலஜில மாட்டிக்கிட்டியே பங்கு.." வைரலாகும் வீடியோ..! 

பிறமொழி படங்களால் நிம்மதியடைந்த திரையரங்கு உரிமையாளர்கள்: ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியாகி வந்த புதுப்புது தமிழ் படங்கள் மக்கள் மத்தியில் எடுபடாத காரணத்தால், அந்நிய மொழியில் உள்ள படங்கள் நேரடியாக அம்மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அப்படங்களில் காட்சியமைப்பு, மக்கள் எதிர்பார்த்த சுவாரசியம் இருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தமிழ் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பை பிற மொழிகள் உள்ள படங்கள் தட்டிச்சென்று, அவை தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை குவிந்துள்ளன.

தமிழ் மொழி படம் இல்லையே என வருத்தம்: என்னதான் அந்நிய மொழியில் வெளியாகும் படங்களை மக்கள் நேரில் வந்து பார்த்து சென்றாலும், தமிழ் மொழி இடைப்பட்ட பட்டியலில் இல்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் அரண்மனை படத்தை எதிர்பார்த்து பலரும் இருக்கின்றனர். அப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கு உரிமையாளர்களின் வேதனை மற்றும் தமிழ் படங்கள் இல்லாமல் பிற மொழி படங்களுக்கு கிடைத்த வரவேற்பை சென்னை ஜிகே சினிமாஸ் மற்றும் வெற்றி சினிமாஸ் உரிமையாளர்கள் தங்களின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.

ஜிகே மற்றும் வெற்றி திரையரங்கு உரிமையாளர்களின் பதிவு உங்களின் பார்வைக்கு..