ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். இருவரும் கலந்துரையாடிய பின்னர், தனித்தனியே ட்விட் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்த பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவில், "டிம் குக்.. உங்களைச் சந்திப்பதில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்காக தங்களின் முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். Samsung Galaxy M14 5G: அட்டகாசமான அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் களமிறங்குகிறது சேம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்.!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு மிகுந்த நன்றி. தொழில்நுட்பம் இந்தியாவின் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப உருவாக்கத்தின் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் விஷயங்களில் நாடு முழுவதும் வளரவும், எங்களின் முதலீடு ஏற்படுத்துவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என கூறினார்.