12th Exam Results (Photo Credit: @DDTamilNews X)

மே 06, சென்னை (Chennai): கடந்த மார்ச் மாதம் 01ம் தேதியில் இருந்து தொடங்கி, மார்ச் 26ம் தேதி வரை, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான (12th Exam Results 2024) அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் 8 இலட்சத்திற்கும் (HSC Exam Results TN) அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இவர்கள் அனைவரின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, மே 06ம் தேதியான இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.! 

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள: மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக, அவர்கள் தேர்வு நுழைவுப்படிவதில் வழங்கிய எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (HSC Results) அனுப்பி வைக்கப்படுகிறது. தனித்தேர்வர்கள், சிறைக்கைதிகள், பள்ளிகளில் தேர்வை எழுதிய மாணவ - மாணவியர்கள் அனைவர்க்கும் இவை பொருந்தும். அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பள்ளி வளாகங்கள், கிளை நூலகங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒட்டப்படுகின்றன. http://dge.tn.gov.in மற்றும் http://tnresults.nic.in  ஆகிய இணையங்களுக்கு சென்றும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்ச்சி விகிதம்: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தேர்வெழுதிய 7 இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% (3.93 இலட்சம் தேர்ச்சி), மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.44% (3.25 இலட்சம் தேர்ச்சி) ஆகும். மூன்றாம் பாலிந்தவராக 1 தேர்வர் தேர்ச்சி அடைந்துள்ளார். மொத்தமாக 94.56 % நபர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7532 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இதில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளாக 2400 பள்ளிகள் இருக்கின்றன. 26352 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதியத்தில் 112 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.