பிப்ரவரி 23, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பட்லாபூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளெ. கடந்த மே மாதம் 20ம் தேதி கர்ப்பிணியாக இருந்த பிரியா காம்ப்ளெ, பிரசவத்திற்காக அங்குள்ள சாவித்ரிபாய் பாஹ்லே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகி இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதியான பிரியாவுக்கு, அன்றைய தினமே குழந்தை பிறந்துள்ளது.
உடல்நலக்குறைவால் கதறிய குழந்தை: பச்சிளம் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, கடந்த மே 31ம் தேதி அவர் அங்குள்ள பிஎம்சி மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஜூன் 02, 2023 அன்று குழந்தை உடல்நலக்குறைவால் கதறி அழுததாக தெரியவருகிறது. BRS MLA Died in Accident: சாலை விபத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர், தொண்டர்கள்.!
வாயில் டேப் ஒட்டிய பணியாளர்கள்: இதனால் பணியில் இருந்த செவிலியர்கள், குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. இதனால் அங்கு பணியாற்றி வந்த செவிலியர்கள் ஸ்வீதா, சவிதா போயி உட்பட மூவர் சேர்ந்து குழந்தையின் வாயில் டேப் கொண்டு ஒட்டி இருக்கின்றனர். என்.ஐ.சி.யு மருத்துவமனையில் இது சாதாரண செயல் என்று அவர்கள் தங்களின் தரப்பு கருத்தை கூறிவருகின்றனர்.
மனித உரிமை ஆணையம் சம்மன்: இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. மனித உரிமை ஆணையமும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை காவல் துறையினருக்கு சம்மன் வழங்கி இருக்கிறது. இதன்பேரில் பாண்டுப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.