மார்ச் 17, புதுடெல்லி (Politics News): காங்கிரஸ் (Congress) கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), இங்கிலாந்தில் (England) நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "இந்திய நாட்டில் (India) ஜனநாயக அமைப்புகள் கொடூர தாக்குதலை சந்தித்துள்ளன. அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக (RSS & BJP) கைப்பற்றியுள்ளன" என கூறியிருந்தார். இதனால் வெளிநாட்டில் மண்ணில் வைத்து இந்தியாவை ராகுல் காந்தி அவமானப்படுத்தி இருக்கிறார் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர்.
மேலும், அவர் பாரளுமன்றத்தில் (Parliament) மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் தரப்பு, எங்களால் மன்னிப்பு கேட்க இயலாது என்று கூறுகிறது. இதனால் இருதரப்பு விவாதங்கள் தொடருகின்றன. இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ (Union Minister Kiran Rijiju) செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், "ராகுல்காந்தி என்ன பேசினாலும், அவரின் சொந்த கட்சிக்கு அது தீங்கை ஏற்படுத்தும். அவர் அவரின் கட்சியை வழிகாட்டும். அவர்களின் உட்கட்சி பிரச்சனை அது. எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால், இந்தியாவுக்கு தீங்கு ஏற்படுத்த முயற்சி செய்தால், நாங்கள் அமைதியாக இருப்போம் என நினைக்க வேண்டாம். அவரை மன்னிக்கவே மாட்டோம். Trichy College Professor Attacks: நடுரோட்டில் பேராசிரியையிடம் நடந்த கொள்ளை விவகாரம்; கொள்ளையனுக்கு கால் முறிந்தது.!
இந்திய நாட்டை இழிவுபடுத்த ராகுலுக்கு எந்த உரிமையும் இல்லை. நாட்டினை இழிவுபடுத்துதல் கடுமையானது இல்லை என காங்கிரஸ் கருதினால், பாராளுமன்றத்தில் ஒருதரப்பு மக்கள் பிரதிநிதியாக இருக்க அவர்களுக்கும், அக்கட்சிக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியை நாடு நிராகரித்ததற்காக, நாட்டை பற்றி மோசமாக பேச அவர்களுக்கு உரிமை இருப்பதாக அர்த்தம் கிடையாது.
காங்கிரசாரை இந்திய மக்கள் நிராகரித்தது எங்களின் தவறு கிடையாது. அதற்காக நாட்டை, ஜனநாயக ஆலயமான பாராளுமன்றத்தை இழிவுபடுத்த காங்கிரஸூக்கு உரிமை கிடையாது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் மன்னிப்பு கோருவது எங்களின் கடமை ஆகும். இந்தியாவுக்கு எதிரான சக்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறது. அவர்களும் ராகுலின் வார்த்தைகளை பேசுகிறார்கள்.
ராகுல் காந்தி இலண்டனில் வைத்து இந்தியா குறித்து பொய் பேசுகிறார். பாராளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை என்கிறார். அவை சரியானது அல்ல. அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பாராளுமன்றத்தில் பேசினார். கல்லூரி, பல்கலை.,யில் பேச அனுமதிக்கவில்லை என்று பொய் கூறினார். தனது யாத்திரையில் தினமும் பலமுறை மத்திய அரசை விமர்சித்து பேசினார். அரசியல் சட்டம், நீதித்துறையை அவர் இழிவுபடுத்துகிறார்.
ராகுல் காந்தி எப்படிப்பட்டவர் என இந்தியர்களுக்கு தெரியும். வெளிநாட்டில் இருப்போர் அவர் கூறுவதை உண்மை என நினைக்கலாம். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க இலண்டனுக்கு சென்று தரையை சுத்தம் செய்யுமா?. மோடி தானாக பிரதமர் ஆகிவிடவில்லை. 140 கோடி மக்களின் ஆசியோடு பிரதமர் ஆகியுள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் பங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என கூறினார்.