நவம்பர் 24, திட்டக்குடி (Technology News): இந்தியாவில் புகழ்பெற்ற பிரதான இ-காமர்ஸ் விற்பனைத்தளமாக உள்ளது பிளிப்கார்ட் (Flipkart). ஆனால், பிளிப்கார்ட்டின் (Flipkart Prize Scam Alert) பெயரை பயன்படுத்தி பல இடங்களில் நூதன மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இன்றளவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் யாவரையும் விட்டுவைப்பதில்லை.
காவல் அதிகாரிகள், பிற அரசு பணியாளர்களில் தொடங்கி சாமானியன் வரை என ஒவ்வொருவரையும் பல மோசடிகள் குறிவைத்துக்கொண்டு இருக்கின்றன. சமீபகாலமாகவே ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்நிறுவனம் உங்களுக்கு பரிசு தருகிறது என கூறி ஆசையாக பேசி, இலட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்து இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இணையவழி மோசடி நடந்ததும் தான், பலருக்கும் அது சார்ந்த உண்மைகள் தெரியவருகின்றன. இந்த நிலையில், செய்தி எழுத்தாளருகே போனில் தொடர்பு கொண்டு, பிளிப்கார்ட் பெயரை பயன்படுத்தி மோசடியை அரங்கேற்ற முயன்ற சம்பவம் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. Lover Refuses Marriage: காதலர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆவேசம்: செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்.!
பிளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளராக உள்ள செய்தியாளரின் அழைப்பு எண், முகவரி உட்பட பல விஷயங்களை சேகரித்து வைத்துள்ள மோசடி கும்பல், செய்தியாளருக்கே தொடர்புகொண்டு ரூ.15 இலட்சம் பணம் பிளிப்கார்ட் சார்பில் பரிசு விழுந்துள்ளதாகவும், இறுதியாக அவர் பொருள் ஆர்டர் செய்து வாங்கிய தொகையை குறிப்பிட்டே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக நடந்த சம்பவம் பின்வருமாறு..,
93554 85161 என்ற எண்ணில் இருந்து செய்தியாளருக்கு தொடர்பு கொண்ட பெண்மணி ஒருவர், பிளிப்கார்ட்டில் நீங்கள் இறுதியாக ஆர்டர் செய்த ரூ.444 தொகைக்கு, ரூ.15 இலட்சம் பணம் அல்லது எஸ்யூவி மகேந்திரா கார் பரிசாக விழுந்துள்ளது என்று கூறினார். மறுகணமே போலியான அழைப்பை உணர்ந்துகொண்ட அவர், அதைப்பெற உங்களுக்கு முன்பணம் அனுப்ப வேண்டுமா? என்றதும், பெண்ணோ ரூ. 3 ஆயிரம் அனுப்பலாம் என கூறினார். பின் சுதாரித்ததை உணர்ந்து, அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பிளிப்கார்ட்டில் வாடிக்கையாளரான செய்தியாளர் பதிவிட்ட முகவரி, இறுதியாக பொருள் வாங்கிய தொகை உட்பட அனைத்து தரவுகளையும் அப்படியே கூறிய மோசடி அழைப்பாளர், அதனை செய்தியாளரிடம் கூறுகிறோம் என்று தெரியாமல் பேசியதுதான் சம்பவத்தின் உச்சகட்ட நிகழ்வே. Woman Removes Pant in Front of Passengers: விமான பயணத்தில் பயணிகளை பதறவைத்த பெண் பயணி: சிறுநீர் கழிக்கப்போவதாக பேண்டை அவிழ்த்து பகீர் செயல்.!
மோசடி குறித்து அழைப்புகளை பெற்றாலோ, பணத்தை இழந்தாலோ தொடர்பு 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். பணத்தை இழந்தவர்கள் 24 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால், பணம் மீட்டுகொண்டுவரப்படும். https://cybercrime.gov.in/ என்ற இணயத்திலும் புகார் அளிக்கலாம்.
பேசிய பெண் வடமாநில பெண் இல்லை, அவரின் பேச்சு நன்கு தெளிந்த தமிழே.. சில வட்டார மொழியையெல்லாம் உடனே உள்வாங்கி பதில் அளித்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே பல போலி கால்சென்டர்கள் சிக்கிய சம்பவமும் உண்டு. அங்கு வறுமையால் வாடும் பெண்களை தேர்ந்தெடுத்து, தான் செய்வது தவறான வேலை என்பதே தெரியாமல் வேலை வாங்கிய கும்பலும் உள்ளது.
இணையவழி குற்றங்களை பொறுத்தமட்டில் அவற்றை தடுப்பது மிகக்கடினம் எனினும், எதிர்காலத்தில் அவை அரசுக்கு பொருளாதார ரீதியான நெருக்கடியை கொடுக்கும் வல்லமை கொண்டது. இவர்கள் சிறுகச்சிறுக திருடி, நாளை அரசின் கருவூலத்திற்கே ஆப்பு வைக்க தொடங்கும் நேரத்தில்தான், அரசு முழுவீச்சுடன் இவ்வாறான மோசடிகளை தடுக்க செயல்படும்.
அதேபோல, இவ்வாறான மோசடி வழிகளில் சம்பாதிக்கப்படும் பணம், திரைமறைவு கும்பலால் எங்கோ ஓர் வெளிநாட்டில் முதலீடாகவோ அல்லது பயணத்திற்கோ செலவு செய்யப்படும் என்பது யாவரும் அறிந்த விஷயம். அதனால் அரசுக்கான வருவாய் பற்றாக்குறை உச்சத்தை அடையும்போதுதான் ஒவ்வொரு பிரச்சனையும் புரியவரும். Laser-Beamed Message From Space: 16 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து வந்த முதல் லேசர் சமிக்கை: வேற்றுகிரகவாசிகள் தொடர்பா?..!
மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருங்கள், மோசடிகளை நம்பி ஏமாறாதீர்கள். அதேசமயம், கோடிக்கணக்கான மக்களின் தரவுகளை சேகரித்து வைத்துள்ள பெருநிறுவனங்கள், அவர்களின் தகவல் கசியாமல் இருக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
மோசடி குறித்து செய்தியாளர் தனது சமூக பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலாவது, "இன்று பிளிப்கார்ட் தளத்தில் இருந்து பேசுவதாக எனக்கு பெண் ஒருவர் +91 93554 85161 எண்ணில் இருந்து தொடர்பு கொண்டார். போனை எடுத்ததும் பிளிப்கார்ட்டில் நீங்கள் ஆர்டர் இறுதியாக ஆர்டர் செய்த தொகைக்கு, ரூ.15 இலட்சம் பணம் பரிசு விழுந்துள்ளது. பணம் வேண்டாதவர்கள் எஸ்யூவி மகேந்திரா காரையும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
மோசடி என தெரிந்ததும், எங்களுக்கு பணம் பரிசு விழுந்தது சரி., அதைப்பெற உங்களுக்கு முன்பணம் அனுப்ப வேண்டுமா என்றதும் 3 ஆயிரம் அனுப்பலாம் என கூறினார். பின் நான் சுதாரித்ததை உணர்ந்து, அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடிகள் இன்றும் தொடர்கிறது. நான் ஊடகத்தில் பணியாற்றுவதால் இதுபோன்ற பலசெய்திகளை நானே பதிவிட்டு இருக்கிறேன். பணம் கொடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான பலரின் விபரத்தை செய்தியாக எழுதி இருக்கிறேன். Delhi Horrific Murder: 60 முறை கத்தியால் வெட்டி, பணம் தரமறுத்த நண்பனை கூறுபோட்ட பயங்கரம்: கொலை செய்தவாறு நடனம்.. ஈரக்குலை நடுங்கும் சம்பவத்தின் வீடியோ உள்ளே.!
பிளிப்கார்ட் பக்கத்தில் கொடுத்த பெயர், போன் நம்பர், முகவரி, இறுதியாக பொருள் ஆர்டர் செய்த விபரம் உட்பட பிற குறிப்புகள் போன்றவற்றை அவர் தெளிவாக சொல்கிறார் எனில், எனது பிளிப்கார்ட் பதிவு விபரம் தொடர்பான பட்டியல் அவரிடம் தெளிவாக உள்ளது என்பதை உறுதி செய்கிறது. எனது தனிப்பட்ட தகவல் கசிவுக்கு பிளிப்கார்ட் பதில் சொல்ல வேண்டும்.
அதேபோல, ஓடிபி உட்பட பிற விசயத்திற்கு குறுஞ்செய்தியில் எச்சரிக்கும் பல ஷாப்பிங் தளங்கள், தங்களின் நிறுவனம் நேரடி பரிசு தருவதாக போனில் தொடர்புகொள்ளாது என செய்தி அனுப்புவதில்லை.. ஏன்?..
பேசிய பெண் வடமாநில பெண் இல்லை, அவரின் பேச்சு நன்கு தெளிந்த தமிழே.. சில வட்டார மொழியையெல்லாம் உடனே உள்வாங்கி பதில் அளித்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே பல போலி கால்சென்டர்கள் சிக்கிய சம்பவமும் உண்டு. அங்கு வறுமையால் வாடும் பெண்களை தேர்ந்தெடுத்து, தான் செய்வது தவறான வேலை என்பதே தெரியாமல் வேலை வாங்கிய கும்பலும் உள்ளது.
ஆகையால், இதுபோன்ற விசயத்திற்கு காவல்துறையின் இணைய பாதுகாப்பு தளத்தில் புகார் அளித்தால், அவர்களோ பணம் இலக்கவில்லை என்றால், உங்களின் புகாரை விழிப்புணர்வுக்காக முறையிட்டதாக மாற்றுங்கள் என்று எனக்கே தொடர்பு கொண்டு கூறுவார்கள். ஏனெனில் எனது முந்தைய அனுபவம் இது.
மேற்கூறிய நம்பருக்கு நான் மீண்டும் தொடர்புகொண்ட போது, சுதாரிப்பாக அழைப்பை எடுக்கவில்லை. இன்னும் அது செயல்பாட்டில் தான் உள்ளது. இம்முறை நான் எங்கும் புகார் அளிக்கப்போவதில்லை. அரசு தேவை என்றால் அவர்களே வழக்குப்பதிந்து விசாரிக்கட்டும்.. விழிப்புடன் இருங்கள். உங்களின் நண்பர், குடும்ப உறுப்பினர்களுக்கு இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
பிளிப்கார்ட் குழு நண்பர்களே.. பயனுள்ள செயலை மேற்கொண்டு வாடிக்கையாளரின் தகவலை பாதுகாத்திடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Thread.. Plz Read
Today a lady contacted me from +91 93554 85161 claiming to be from Flipkart site. After picking up the phone, She Said 'you will receive a cash prize of Rs.15 lakh for the final order amount' on #Flipkart.
— Sriramrpckanna (@Sriramrpckanna1) November 24, 2023
தமிழில்.. pic.twitter.com/MVCBNIFfie
— Sriramrpckanna (@Sriramrpckanna1) November 24, 2023