ஏப்ரல் 11, புதுடெல்லி (New Delhi): தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி (RSS Rally) நடத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் சார்பில் தமிழ்நாடு அரசிடம் (Tamilnadu Govt) கோரிக்கை வைத்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி மறுத்தது.
இதனையடுத்து, ஆர்.எஸ்.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வாதிட்டபின்னர், பேரணியை நடத்திக்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அனுமதி வழங்கியது. ஆனால், தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. Dharsha Gupta Hot: கிழிந்த உடையில் முன்னழகை ததும்பத்ததும்ப காண்பித்த தர்ஷா குப்தா.. விழியை எடுக்காமல் ரசிக்கும் ரசிகர்கள்.!
தமிழ்நாடு அரசு வாதத்தை முன்வைக்கையில், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்று பேசியது. எதிர்தரப்பு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணிக்கு அனுமதி மறுப்பது சரியானதா? என வாதங்களை முன்வைத்தது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு டெல்லி உச்சநீதிமன்றத்திற்கு சென்று மேல் முறையீடு செய்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த அனுமதி வழங்கினர்.