Prime Minister Narendra Modi (Photo Credit: ANI)

மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் - மே மாதம் நடைபெறவுள்ளது. 2014, 2019 என இரண்டு மக்களவை தேர்தலில் தொடர்ந்து தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியை தக்கவைத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறை 400+ தொகுதிகளை இலக்காக வைத்து இறுதிக்கட்ட அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறது.

சூடேறும் அரசியல்களம்: பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் காற்பந்தாகிவிடும் என்பதால், அதற்கு பின் அரசியல் ரீதியான பயணங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தற்போதைய நிலையில் இறுதிக்கட்டமாக நிறைவுற்ற பல பணிகளை தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணித்து வரும் பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு பணிக்காக மாநில வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். Tomato Price: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? 

சில நாட்களில் தேர்தல் தேதிகள் அறிவிப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி, இம்முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வியூகத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஒருங்கிணைந்த இந்திய வளர்ச்சி கூட்டணி (INDIA) உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவை இறுதிக்கட்ட விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி மீது அலாதி அன்பு: இதனால் பாஜகவின் சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய அளவிலான பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் மீது அன்புகொண்ட பல திரையுலக பிரபலங்களும், தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். College Girl Kidnapping: கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்..! 

சுவானி ராஜின் பாடல் வெளியீடு: இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாடகி சுவானி ராஜ், பிரதமர் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் பொருட்டு தூ ஹாய் விஜேதா ஹோகா (Tu Hi Vijeta Hoga) என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட பல சாதனைகளை பட்டியலிட்டு உருவாகியுள்ள பாடலுக்கான வரிகளை அசோக் பஞ்சாபி எழுதி இருக்கிறார். உமர் ஷேக் ஆணுக்கான பின்னணி குரலையும் பதிவு செய்து, இசையமைத்து இருக்கிறார்.

கருத்துக்கணிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் நவ் இதழ் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 399 + இடங்களை காப்பாற்றலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 120 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனவும் அக்கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.