Union Minister Amith Shah Speech at Assam | Visuals Captured from Video (Photo Credit: ANI)

ஏப்ரல் 10, கிபிதூ (Assam News): அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிபிதூ (Kibithoo, Assam) நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amith Shah), "2014க்கு முன், வடகிழக்கு பகுதி முழுவதும் குழப்பமான பகுதியாக அறியப்பட்டது.

ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் 'கிழக்கை பார்' கொள்கையால், வடகிழக்கு தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. நமது எல்லையில் ITBP மற்றும் இந்திய ராணுவம் இருப்பதால், நமது நிலத்தில் ஒரு நுனியில் கூட யாரும் அத்துமீறி நுழைய முடியாது என்று பெருமையுடன் கூறலாம். Online Rummy Banned TN: ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான தீர்மானம்; பச்சைக்கொடி காண்பித்த ஆளுநர்.. அதிரடி சம்பவம்.!

நமது ITBP ஜவான்களும்-ராணுவமும் நமது எல்லையில் இரவும் பகலும் உழைத்து வருவதால் இன்று முழு நாடும் தங்கள் வீடுகளில் நிம்மதியாக உறங்க முடிகிறது. இன்று, நம் மீது தீய பார்வையை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பெருமையுடன் கூறலாம்" என பேசினார்.