ஏப்ரல் 10, சென்னை (Chennai): கடந்த அதிமுக (AIADMK) ஆட்சியின் போது, அப்பாவி மக்களின் உயிரை குடிக்க காரணமாக இருந்த ஆன்லைன் ரம்மி (Online Rummy) மீது தடை விதித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் ஜங்கிலி கேம்ஸ் நிறுவனத்தின் மூலமாக நீதிமன்றத்தில் உடைத்தெறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்தபின், ஆன்லைன் ரம்மி மீது தடை விதிக்க கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை காலம் தாழ்த்திய ஆளுநர், இறுதியில் மாநில அரசுக்கு அவ்வாறான அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காண்பித்து நிராகரிப்பு செய்வதாக கூறினார். இதுகுறித்து பல விவாதங்கள் எழ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளிக்கையில் அதற்கான அதிகாரம் உண்டு என்பதை தெரிவித்தார். இதனையடுத்து, ஆளுநரின் மீது ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் கடும் கொந்தளிப்பு நிலவியது. Airport Employee Murder: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தமிழக அரசியல் கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த மக்களின் வெற்றியாகவும் அமைந்துள்ளது.
இன்று முதல் ஆன்லைன் ரம்மிக்கான தடைச்சட்டம் அமலில் வருவதால், தமிழ்நாட்டில் இன்று முதல் ஆன்லைன் ரம்மி போன்றவற்றை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும். அதேபோல, அதனை செல்போன்களில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை போன்றவை விதிக்கப்படும்.
முன்னதாக இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.