கண்கோளாறு நிழற்படம் (Photo Credit: Wikitionary, Amazon)

மே 24, சென்னை (Spiritual Updates Tamil): மனிதருக்கு கண்திருஷ்டி என்பது இயல்பானது. சிலரின் பார்வையே நமது உடல்நலத்தை கேள்விக்குறியாக்கும், வேலைகளில் இறக்கத்தை ஏற்படுத்தும். நல்லபடியாக தொழில் நடந்து பொருட்செல்வம் ஈட்டிய பலரும் கண் திருஷ்டி காரணமாக நிலைதடுமாற வாய்ப்புகள் ஏற்படும்.

நல்ல வேலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பணிக்கு செல்ல இயலாத சூழலும், குடும்பத்திற்குள் ஒற்றுமை குறைவு, செயல்களை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதம் போன்றவை ஏற்படும். இதற்கு நம்மை கீழக எண்ணத்தோடு பார்க்கும் கண்கோளாறு உடையோர் காரணியாக அமைக்கின்றனர்.

இராஜாவாக மந்திரியை வைத்து இராஜாங்கம் நடத்தும் நபர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக குடிசை வீட்டில் இருப்போராக இருந்தாலும் சரி கண்திருஷ்டி பாதிப்பு என்பது எப்போதும் இருக்கும். நமது முன்னோர்கள் அதனாலேயே "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்று கூறுவார்கள். MS Dhoni: ஓய்வுக்கா?.. அதுக்கு இன்னும் பல காலம் இருக்கே.. மாஸ் காண்பித்த தல தோனி..! கொண்டாடும் ரசிகர்கள்.!

சிலரது பார்வை அவரவர் வேலையை செய்யும் அப்பாவிகளின் உடல் நலத்தை முடக்கி, அவர்களின் வருவாய்க்கு எமனாக அமையும். எண்ணம் நன்மையாக இருப்போருக்கு அனைத்தும் நன்மையாக இருக்கும். நாம் நன்மையுடன் பார்க்கும்போது எவருக்கும் எந்த பாதிப்பும் இராது.

பெருந்தன்மை இன்றி, அவர்கள் அப்படி உழைக்கிறார்கள், முன்னேறுகிறார்களே, வருமானம் காண்கிறார்களே, தம்பதிகள் மகிழ்ச்சியுடன் அன்பாக இருக்கிறார்களே என்று பொறாமை குணம் கொண்ட எண்ணத்தோடு பார்ப்பவரால் கண் திருஷ்டி ஏற்படுகிறது.

கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. இவ்வாறானவற்றை முதலில் உணர்ந்துகொண்ட முன்னோர்கள், சிறுகுழந்தைகளுக்கு பொட்டு வைக்கையில் திருஷ்டி பொட்டும் சேர்த்து வைப்பார்கள். நன்கு ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு இரவில் திருஷ்டி தீபம் ஏற்றுவார்கள். Rajinikanth About Sarath Babu: “கோபமே வராத நல்ல மனிதர் அவர்” – சரத் பாபு குறித்து கனத்த இதயத்துடன் மனம்திறந்த ரஜினிகாந்த்.!

ஒவ்வொரு வீட்டிலும் வாயிலில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளி கிழமையில் இருக்க வேண்டும். அவற்றில் மஞ்சள்-குங்குமம் இட வேண்டும். இவை எதிர்மறை சக்தியை மாற்றும். நமது காலடி மண், மிளகாய், உப்பு ஆகியற்றை எடுத்து நெருப்பில் இட்டாலே, அதன் நெடியை வைத்து நம் மீது இருக்கும் கண் திருஷ்டியை உறுதி செய்யலாம்.

எலுமிச்சை, படிகாரம், குங்குமம், பூசணி, கற்றாழை போன்றவை திருஷ்டியை போக்குபவை ஆகும்.வீட்டில் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண் திருஷ்டியை நீக்கும். வீட்டின் நுழைவுகளில் பெரிய நிலைக்கண்ணாடி அமைக்க வேண்டும். துளசி மாடம் வைத்து வழிபடலாம்.

இல்லத்தின் வாயில் விநாயகர் படத்தை நுழையும் இடத்தில் வடக்கு திசை பார்த்து வைக்கலாம். திருஷ்டி பொம்மையை மாட்டலாம். இவை நமது வீட்டில் எதிர்மறை சக்திகள் மாறி, நமக்கு நல்ல நிலையை உண்டாக்கும்.