பிப்ரவரி 23, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு பாதுகாப்பு துறை, துரித உணவகத்தை நடத்தி வரும் பிரபலமான மெக்டொனால்டு நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது. உண்மையான சீஸ்க்கு பதிலாக போலியான மற்றும் தரம் குறைந்த சீஸை பயன்படுத்தியது உட்பட பல்வேறு காரணத்திற்காக மும்பையில் பிரதான இடத்தில் உள்ள மெக் டொனால்ட் நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.!
மனிதர்களின் உடலுக்கு கேடு விளைக்கும்: இதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் உள்ள மெக்டொனால்டு நிறுவனத்தின் அலுவலகங்களில், இது போன்ற சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலாடை கட்டி மற்றும் சீஸ் ஆகிய பொருட்கள் தயாரிப்பின் போது பாரம்பரிய முறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீஸ் தயாரிக்க மெக்டொனால்ட் பயன்படுத்தும் முறையும், அவர்கள் பயன்படுத்தும் தரமற்ற பொருட்களும் மனிதர்களின் உடலுக்கு கேடு விளைக்கும் தன்மையை கொண்டது. Goods Train Derailed: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!
மெக்டொனால்டு விளக்கம்: இதனையடுத்து அந்நிறுவனம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகமத் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மெக்டொனால்டு நிறுவனத்தில் நடைபெற்ற ஆய்வு சீஸ் கட்டிகள் தரமில்லாமல் இருந்துள்ளது. அதனை பயன்படுத்தி வெஜ் பர்கர், கான், சீஸ் பர்கர், சீஸ் இத்தாலி வெஜ் உட்பட 8 பொருட்களை தயாரித்து இருக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மெக்டொனால்டு நிறுவனம், நாங்கள் தரமான சீஸ்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.