மே 15, சென்னை (Health Tips): இன்றளவில் மக்கள் தங்களின் வாழ்நாட்களில் பலவகையான உணவு மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் உணவுகள் உட்பட உடலுக்கு நன்மை தரும் உணவுகளை புறக்கணித்து வருவதால் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.
இதனால் மாரடைப்பு நோயின் அபாயம் என்பது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு அபாயத்தை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு பட்டியல்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.
ஒமேகா கொழுப்பு அமிலம்: இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. சாலமன் மீங்களில் ஒமேகா 3 சத்து அதிகளவு உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் உதவி செய்கிறது. MS Dhoni About Shivam Dube: “எங்களுக்காக வேலை செய்த ஷிவத்தால் மகிழ்ச்சி” – மனம் திறந்த எம்.எஸ் தோனி..!
தானியங்கள்: தானியங்களில் உள்ள நார்சத்து இரத்த சர்க்கரை அளவினை சீராக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். தானிய வகை உணவுகளை அளவோடு சாப்பிடுவது மகிழ்வான வாழ்க்கைக்கு வழிவகை செய்யும். இதயம் மற்றும் நீரிழிவு சார்ந்த நோய்களை குறைக்க வழிவகை செய்யும்.
பழங்கள் & காய்கறிகள்: நமது வளமான வாழ்க்கைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்போதும் நன்மை சேர்க்கும். இவைகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, ஏ, பொட்டாசியம், போலிக் அமிலம் போன்றவை இதய நோய்க்கான ஆபத்துகளை குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
நல்ல கொழுப்புகள்: பசு நெய், கடுகு எண்ணெய் போன்றவை உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் கொண்டவை. இவற்றை உணவில் அளவோடு பயன்படுத்தி சமைத்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. Road Accident: லாரி – வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!
பால்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது உடலில் கொழுப்புகள் சேர வழிவகை செய்யும். பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் உட்பட பால் பொருட்களில் கொழுப்புகள் அதிகம் கொண்டவை. அதனால் பால் பொருட்களில் கொழுப்புகள் குறைந்த உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை: துரித உணவுகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், ரசாயனங்கள் கலக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், கொழுப்புகள் நிறைந்த இறைச்சி, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது உட்பட பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படும்.