ஜூலை 06, மேட்டுப்பாளையம் (Coimbatore News): அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகத்தை கையில் எடுத்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்று ஜூலை 7ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் 2 சட்டப்பேரவை தொகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. Vellore News: பர்த்டே டிரெஸ்க்காக உயிரை மாய்த்த 15 வயது சிறுவன்.. கதறித்துடிக்கும் பெற்றோர்.!
வனபத்ரகாளியம்மன் கோவில் தரிசனம் :
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலா 1 இடம் என மக்கள் அதிகம் கூடும் இடத்தை தேர்வு செய்து அங்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு எதிரான பல்வேறு கருத்துகளை முன் வைத்து எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளார். தேர்தல் வியூகம் தொடங்குவதை முன்னிட்டு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சாமி தரிசனம் செய்து அதனைத் தொடர்ந்து விவசாயிகள், நெசவாளர்களுடன் சிறப்பு சந்திப்பை நிகழ்த்தி கலந்துரையாடல் செய்திருந்தார்.
சிறப்பு சந்திப்பில் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி :
அப்போது அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை போல மேட்டுப்பாளையத்திலும் புதிய திட்டத்தை செயல்படுத்தி இங்குள்ள விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பலன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பிரத்தியேக பிரச்சார வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் :
#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
இன்று : மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் https://t.co/dIEETxLE0n
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 7, 2025