ஜூலை 16, திருவனந்தபுரம் (Thiruvanathapuram): கரூரில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் அபகரித்து மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தனக்கு முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்த நிலையில், அவை நிராகரிக்கப்பட்டது. Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..!
எம்.ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது:
இதனால் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழகம் அழைத்து வரப்படவுள்ளார் என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியலில் பதற்றமான சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. அதிமுகவில் முக்கியப்புள்ளியாக இருந்து வரும் எம்.ஆர் விஜயபாஸ்கரை கைது செய்துள்ளது, அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
ரூ.100 கோடி நிலமோசடி விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், தனிப்படை காவல்துறையினரால் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கான முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.#MRVijayaBaskar | #AIADMK @latestly pic.twitter.com/vgn04siDiv
— Sriramrpckanna (@Sriramrpckanna1) July 16, 2024