
ஜூலை 05, திண்டிவனம் (Viluppuram News): பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொறுப்பு விஷயத்தில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் (Ramadoss Vs Anbumani Ramadoss) இடையே கருத்து முரண் தொடர்ந்து வருகிறது. உட்கட்சியில் குழப்ப நிலையை மாற்று அரசியல் கட்சியினர் மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது. 2026 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே பாக்கி இருக்கும் நிலையில், பாமகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலை அக்கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று பாமக கௌரவத்தலைவர் ஜி.கே. மணி (PMK GK Mani) திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வந்தே பாரத் இரயில் மோதி உடல் சிதறி பலி.. மனைவி, மகன் கண்முன் சோகம்.!
பாமக பிரச்சனை தீர்வு என்ன (PMK Problem and Solution)?
அப்போது, அவர் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் வலிமையான கட்சி என பேசப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, என்னைப்போல பொறுப்பாளர்களையும் மனஉளைச்சலில் ஆழ்த்தியுள்ளது. இருதரப்பில் இருந்து தினம் வரும் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மாற வேண்டும், பழைய நிலைக்கு வர வேண்டும். அதுவே எங்களின் ஆசை. இந்த விஷயத்துக்கு தீர்வு இருவரும் பேச வேண்டும். இல்லையென்றால் தீர்வு கிடைக்காது. இருவரும் சேர்த்து பேசி முடிவை வெளியிட்டால் பாமக மீண்டும் பழைய நிலையில் செயல்பட தொடங்கும். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்துவது பாமக மீண்டும் பழைய நிலையில் வளர்ச்சி பெற வேண்டும்.
பாமக நலிவடையும் (PMK Party Down):
அதற்கு இருவரும் பேசி முடிவு எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் கொறடா மாற்றம் தொடர்பாக மனு கொடுத்துள்ளது பெரிய பிரச்சனை இல்லை. இன்னும் ஓராண்டுகள் தான் சட்டப்பேரவையும் இருக்கும். பின் தேர்தல் வந்துவிடும். கட்சி நிர்வாகிகளை மாற்றுவது, நீக்குவது குழப்பத்தையே தரும். ராமதாஸ் இல்லையென்றால் பாமக, வன்னியர் சங்கம் என எந்த இயக்கமும் இருக்காது. ராமதாஸை போல அன்புமணியையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இவர்கள் இணைந்தால் மட்டுமே வலிமை நீடிக்கும். இவர்கள் இணையாத பட்சத்தில் கட்சி நலிவடைந்துவிடும். தற்போதைய நிலையில் தீர்வுதான் முக்கியம். பாமகவில் நடக்கும் உட்கட்சி குழப்பத்துக்கு பிற கட்சிகள் காரணம் இல்லை.