Trending Video: காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய பெண்கள்.. உதவிக்கரம் நீட்டிய உள்ளூர் மக்கள்.!

பீகார் லங்குரியா மலை நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்களை மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Trending Video: காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய பெண்கள்.. உதவிக்கரம் நீட்டிய உள்ளூர் மக்கள்.!
Visual From Video (Photo Credit : @thebiharoffice X)

ஜூலை 01, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் லங்குரியா மலையின் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் நடுவே சிக்கித்தவித்த ஆறு பெண்களை உள்ளூர் மக்கள் துணிச்சலுடன் முன்வந்து காப்பாற்றி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், பலரும் கிராம மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன் இது போன்ற வெள்ளம் சென்றதாகவும், தற்போது இந்த ஆண்டு தான் மீண்டும் இந்த ஆற்றில் வெள்ளம் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன. சாக்லேட் கேட்ட குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்.! 

வெள்ளத்தில் சிக்கிய பெண்களை மக்கள் காப்பாற்றிய வீடியோ:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).