ஜனவரி 14, கொளத்தூர் (Chennai News):  உலகத்தமிழர்கள் கொணடும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை 2025 களைகட்டி இருக்கிறது. இதனை முன்னிட்டு பலரும் தங்களின் வீடுகளில் தைப்பொங்கல் தினமான இன்று சூரிய பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இன்று பொங்கல் வைக்க மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை நல்ல நேரமாகவும் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!" என தெரிவித்துள்ளார். Pongal Wishes 2025 Tamil: இன்று தைப்பொங்கல் 2025: பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்துப்பதிவு இதோ.!

பொங்கல் பண்டிகை & தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)