மே 01, பெரம்பூர் (Chennai Crime News): சென்னையில் உள்ள பெரம்பூர் (Perambur), வில்லிவாக்கம் ராஜா தெருவில் வசித்து வரும் சரத்குமார் (வயது 28), தனியார் வங்கியில் பணம் வசூலித்துத்தரும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். தற்போது வரை அவருக்கு திருமணம் ஆகாத நிலையில், உள்ளூரில் ரவுடி போல வலம் வந்த சரத்குமாரின் மீது காவல் நிலையங்களில் கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மதியம் வில்லிவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த கும்பலால் ஓடஓட விரட்டி கொல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் காவல்துறையினர், சரத்குமாரின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணைக்கு பின்னர் இவ்விவகாரத்தில் தொடர்புடைய நிதிஷ்குமார் (வயது 23), பிரசாந்த் (வயது 23), பெஞ்சமின் (வயது 23), ரத்தினகுமார் (வயது 22), யோகேஸ்வரன் (வயது 23) ஆகிய ஐந்து பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பெரவலூர் பகுதியில் ஜானகிராமன் கோவில் வளாகத்திற்குள் மதுபானம் அருந்துவதை தட்டிக்கேட்க, ஓம் பிரகாஷ் மற்றும் சரத்குமார் உட்பட பலர் கும்பலால் ஜானகிராமன் கொலை செய்யப்பட்டார். இதனால் ஜானகிராமனின் உறவினர் நிதிஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரத்குமாரை கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்திற்கு முன்னதாக சரத்குமாரை கொலை செய்ய இருப்பதாக இன்ஸ்டாகிராமில் மிரட்டல் மெசேஜும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடலாம் என்று இருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. Australia Squad For 2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?.!
THREATENED VIA INSTAGRAM, ROWDY MURDERED
Five assailants surrendered to the Rajamangalam police late on Monday night in connection with the murder of a rowdy, Sarathkumar, who was chased to death on the Villivakkam flyover in full view of the public on Monday. The deceased,… pic.twitter.com/aThowMOaSN
— A Selvaraj (@Crime_Selvaraj) April 30, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)