Airport Moorthy (Photo Credit: @airportmoorthy X)

செப்டம்பர் 08, சென்னை (Chennai News): சோசியல் மீடியாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் ஏர்போர்ட் மூர்த்தி (Airport Moorthy). இவர் புரட்சி தமிழகம் (Puratchi Thamizhagam) என்ற கட்சியை நடத்தி வருகிறார். அரசியலில் வலதுசாரி ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர், திமுக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக பல்வேறு வாதங்களையும் முன்வைத்து வருகிறார். குறிப்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் கேள்வி எழுப்புவதாக அவதூறான வார்த்தைகளை அள்ளி வீசி வந்தார். இதனால் விசிக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஏர்போர்ட் மூர்த்தியை கடுமையாக கண்டித்து வந்தனர். இன்றைய வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அலர்ட்.. இன்று முழுவதும் கனமழை அலர்ட்.! 

ஏர்போர்ட் மூர்த்திக்கு நடந்தது என்ன?

இதனிடையே, கடந்த சனிக்கிழமை சென்னை டிஜிபி அலுவலக வாசலில் வைத்து மூர்த்தியை விசிக ஆதரவாளர்கள் தாக்கி இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஆடுதுறையில் பாமக பிரமுகர் & ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலினை கொலை செய்ய குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலைதொடர்ந்து, ம.க. ஸ்டாலினுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாமக, நாதக கட்சியினர் நேரில் வந்திருந்தனர். இவர்கள் வருகைக்கு முன்னதாக புரட்சி தமிழகம் கட்சியின் தலைவராக ஏர்போர்ட் மூர்த்தியும் ஒருமித்த கருத்துடன் வந்திருந்தார். அப்போது, இவரை அடையாளம் கண்ட விசிக தொண்டர்கள் செருப்பால் அடித்து எனது தலைவரை நீ எப்படி அவதூறாக பேசலாம் என தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு மூர்த்தி தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து விசிக தொண்டர்களை தாக்கி இருந்தார். ஒருகட்டத்தில் விசிக தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். தாக்குதல் குறித்து விசிக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. Sathyabama: அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி தரவு.! 

ஏர்போர்ட் மூர்த்தி கைது:

இந்நிலையில், விசிக பிரமுகர்களை தாக்கியது, விசிக தலைவர் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உட்பட பல்வேறு புகார்களின் கீழ் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் அவரை வீட்டில் வைத்து கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்ஜாமின் கிடைக்காத பட்சத்தில் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் புரட்சி பாரதம் தலைவரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடந்த வீடியோ: