செப்டம்பர் 02, சென்னை (Chennai News): அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளால் தனித்தனியாக பிரிந்த நபர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் அதிமுக டிடிவி தினகரன் தலைமையில் அமமுக கட்சியாக உருவானது. சசிகலா அமமுக மற்றும் அதிமுக மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், அவரையும் அதிமுகவுடன் ஒருங்கிணைக்க முயற்சி எடுத்து வருகிறார். Thiruvallur: ஏரியாவுல யார் கெத்து? இருதரப்பு மோதலில் இளைஞர் வெடிகுண்டு வீசி படுகொலை.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு டிரீட்மென்ட்.!
செப்டம்பர் 5-ஆம் தேதி மனம் திறப்பதாக செங்கோட்டையன் அறிவிப்பு :
இதனிடையே செப்டம்பர் 1-ஆம் தேதியான நேற்று சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாக கூறியிருக்கிறார். இது அதிமுக மட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக செங்கோட்டையன் தனி அணி போன்று செயல்பட்டு வந்தார்.
அரசியலில் பரபரப்பு :
பின் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு அவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையேயான பிரச்சனையை அமைதிப்படுத்தினர். தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி அணி திரண்டு இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்களும் தொடர்ந்துள்ளன. இந்த நிலையில் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ பண்ணாரியும் பங்கேற்றுள்ளார். மேலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துள்ளனர். இதனால் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அவர் எடுக்கப்போகும் முடிவைப்பொறுத்து அதிமுகவின் எதிர்காலம் மாறும் என்பதால் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.