DMK A Raja (Photo Credit : @SparkMedia_TN X)

ஜூன் 09, தேனாம்பேட்டை (Chennai News): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் முன்னிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது, பேசிய அமித்ஷா மற்றும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றோர் திமுகவுக்கு எதிராக கடும் விவாதங்களை முன் வைத்திருந்தனர். Chennai News: 13 வயது சிறுமி கால்களை முறித்து பலாத்காரம்.. செக்யூரிட்டியின் பதறவைக்கும் செயல்.! 

ஆ. ராசா கண்டனம்:

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி ஆ.ராசா, அமித்ஷாவுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியது பின்வருமாறு, "தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அமித்ஷா விரும்பவில்லை. மோடி என அனைவரும் சாதாரண ஆட்கள் தான் என்பதை உணர வேண்டும். மதவாதத்திற்காக தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. மதவாத பிரச்சனையை ஏற்படுத்த முருகன் மாநாட்டுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

ஆதாரம் இருக்கா?

மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் மடை மாற்றுவதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக இந்துக்களை தூண்ட முருகன் மாநாடு சர்ச்சைக்குரிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது. கீழடியில் அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு நிராகரித்து வருவது ஏன்?. அவதூறு தொடர்பான பேச்சுக்களை மத்திய உள்துறை அமைச்சர் நிறுத்தி விடுவது நல்லது. திமுகவைப் பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக். திமுக தேர்தலில் கொடுத்த 98% வாக்குகளை நிறைவேற்றி விட்டது" என பேசினார்.