ஜனவரி 25 , வேங்கிடநல்லூர்: திமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து அரியணை ரியாத்தில் இருந்து, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது தலைமை வரை பெரும் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
நமது நிர்வாகிகள் கட்சியின் செயல்பாடுகளை அமைதியான வழியில் கவனித்து, மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், முதல்வர் மு.க ஸ்டாலின் வாய்மொழியாக தெரிவித்தும் பலன் இல்லை. ஏதேனும் ஒரு சூழலில் சர்ச்சை அவர்களை சூழ்ந்துவிடுகிறது. Daughter Helps Father: காயமடைந்த கையுடன் தந்தை.. மிதிவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார மகள்.. வைரல் வீடியோ.!
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேங்கிடநல்லூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
இதனால் விழா ஏற்பட்டு பணிகளை கவனிப்பதற்கு வந்த தமிழ்நாடு பல்வளத்துறை அமைச்சர் நாசர், நிர்வாகிகள் மாறுவதற்கு நாற்காலிகளை எடுத்து வர தொனரிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் திரளாக இருக்க, ஒருசில நாற்காலிகள் மட்டுமே தாமதத்துடன் எடுத்து வரப்பட்டதால் ஆத்திரமடைந்த நாசர், தொண்டரின் மீது கல்லை விட்டு எறிந்தார். இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகியுள்ளது.
#WATCH | Tamil Nadu Minister SM Nasar throws a stone at party workers in Tiruvallur for delaying in bringing chairs for him to sit pic.twitter.com/Q3f52Zjp7F
— ANI (@ANI) January 24, 2023