VC Chandrasekar | DMK Logo (Photo Credit: @sjeeva26 X / @Arivalayam X)

ஜனவரி 11, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு (Erode East Constituency) சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan) உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, டெல்லி மாநில சட்டப்பேரவை (Delhi Assembly Election 2025) தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தலும், அதனைத்தொடர்ந்து 08ம் தேதி முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை (Selvaperunthagai) அறிவிப்பு:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த இளங்கோவன் மறைவை காரணமாக, அந்த தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா? அல்லது காங்கிரஸ் கூட்டணியில் பலம் பொருந்திய மாநில அணியாக இருக்கும் திமுக போட்டியிடுமா? என்ற ஆலோசனைக் கூட்டமானது திமுக கூட்டணி, காங்கிரஸ் கட்சியினர் இடையே நடைபெற்றது. நேற்று (ஜனவரி 10, 2024) இரவில் காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Newborn Baby Killed: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்; பச்சிளம் பிஞ்சை 23 வயது இளம்பெண்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..! 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்:

அதனைத்தொடர்ந்து, இன்று திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக விசி சந்திரகுமார் (VC Chandrakumar) போட்டியிடுவார் என தமிழ்நாடு முதல்வர் & திமுக (DMK) தலைவர் முக ஸ்டாலின் (MK Stalin) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக தற்போது பொறுப்பில் இருந்து வரும் விசி சந்திரகுமார், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு மக்களவைத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

முன்னாள் தேமுதிக, இந்நாள் திமுக:

தற்போது அவர் தேமுதிகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு நெருங்கிய அனுதாபியாக இருந்து வந்த விசி சந்திரகுமார், தேமுதிகவில் முக்கிய பொறுப்பிலும் வகித்து வந்தார். பின் அதில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற இயக்கத்தை உண்டாக்கி, தனியாக செயல்பட்டு வந்தார். அதனைத்தொடர்ந்து, திமுகவில் அவர் இணைத்துக் கொண்ட நிலையில், தற்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு: