
மே 17, ஆரணி (Tiruvannamalai News Today): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியைச் சேர்ந்தவர் சேவூர் ராமச்சந்திரன் (Sevvoor Ramachandran). இவர் அதிமுக எம்.எல்.ஏ (Arani MLA Sevvoor Ramachandran)ஆவார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2016, 2021ம் ஆண்டில் தொடர்ந்து ஆரணி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வாகி இருக்கிறார். இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சரான சேவூர் ராமச்சந்திரன் மீது சொத்துகுவிப்பு தொடர்பான புகார் எழுந்தது. அதாவது, அமைச்சராக பொறுப்பில் இருந்த சேவூர் ராமச்சந்திரன், தனது வருமானத்தை காட்டிலும் 1100% அதிக சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும், அறநிலையத்துறையின் அதிக ஊழல் நடந்துள்ளதாகவும், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் தனது பெயர், குடும்பத்தினரின் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்த விசாரணை எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. Scam Alerts: ரேபிடோவில் ஆர்டர்.. பணமே அனுப்பாமல் திருட்டு வழியில் செல்போன் வாங்கிய இளைஞர் கைது.!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை:
இந்நிலையில், இன்று (மே 17) காலை முதலாகவே ஆரணியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரனின் வீடு, அவரின் மகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் சோதனை நடத்துவதற்கான காரணம் அதிகாரபூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேற்படி சோதனை நடந்து முடிந்ததும் சோதனைக்கான காரணம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.