Tiruvallur lift Mechnic Murder Case Victim & Accuses (Photo Credit: @PolimerNews X)

ஏப்ரல் 02, ஆரணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், இயற்கை உபாதை கழிக்க வயலுக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று இருப்பதை கண்டனர். இந்த விஷயம் குறித்து மார்ச் 30, 2025 அன்று, காலை 6 மணிக்கு மேல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த ஆரணி காவல்துறையினர், இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது பொன்னேரி, சின்னம்பேடு சங்கர் (30) என்பது உறுதியானது. இவர் லிப்ட் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சங்கர் மாயமானதாக உறவினர்கள் தேடிவந்தபோதுதான், அவர்களுக்கு அதிர்ச்சிதரும் விஷயமாக சங்கரின் கொலை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. Bangalore Teacher: மாணவரின் தந்தையுடன் கள்ளக்காதல்.. பெண் ஆசிரியையின் சேட்டை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.! 

கள்ளக்காதல் விவகாரம்:

சென்னையில் லிப்ட் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் சங்கர், திருமணம் செய்யவில்லை. தாய்-தந்தையுடன் வசித்து வந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் சங்கரின் செல்போனை ஆய்வு செய்து, அதே பகுதியில் வசித்து வரும் 31 வயது மஞ்சுளாவை கைது செய்தனர். மஞ்சுளா 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தவர் ஆவார். மஞ்சுளாவின் கணவர் பாம்பு கடித்து உயிரிழந்துவிட்ட பின், சங்கர் - மஞ்சுளா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி, நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளது. இந்த விஷயத்தை மஞ்சுளாவின் தம்பி மகன் தயாளன் அறிந்துகொண்டுள்ளார். இதனால் மஞ்சுளாவை அவர் சத்தமிடவே, சங்கருடன் கொண்ட தொடர்பை பெண் துண்டித்துள்ளார். Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.! 

இரும்பு கம்பியால் தலையில் அடித்துக்கொலை:

இந்த விஷயத்தில் வழக்கில் புதிய திருப்பமாக தயாளனிடம் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது, கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதாவது, மஞ்சுளாவின் கணவர் இறந்தபின், அவரது குடும்பத்தை தயாளன் கவனித்து வந்துள்ளார். தயாளன் மஞ்சுளாவுக்கு அத்தை உறவுமுறை. மஞ்சுளா - சங்கர் இடையேயான உறவை அறிந்திருந்த சங்கர், மஞ்சுளாவை எச்சரித்தபின் அவர் அமைதி ஆகினார். ஆனால், சங்கர் தொடர்ந்து மஞ்சுளாவுக்கு தொடர்புகொள்ளவே, சம்பவத்தன்று ஏரிக்கரைக்கு சென்ற சங்கரை தயாளன் பின்தொடர்ந்தார். அங்கு மேற்கூறிய விஷயம் குறித்து எழுந்த வாக்குவாதத்தில், இரும்பு கம்பியால் தயாளன் தாக்கியதில் கொலை சம்பவம் நடந்துள்ளது. டிவி ரிமோட்டுக்கு நடந்த சண்டை; 7 வயது சிறுமி கழுத்து நெரித்துக்கொலை.! 

உண்மையை மறைத்த அத்தை:

முதலில் மஞ்சுளா தனது உறவினர் தயாளனிடம் தன்னை நல்லபடியாக கட்டிக்கொள்ள, சங்கர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் கள்ளக்காதல் உறவை மறைத்து நாடகமாடிய மஞ்சுளாவின் பொய் கொலைக்கு காரணம் அமைந்துள்ளது. இந்த விஷயம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து அதிகாரிகள் மஞ்சுளா, தயாளன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.