MDMK Vaiko | LTTE Velupillai Prabhakaran (Photo Credit: @ANI X)

நவம்பர் 27, சென்னை (Chennai): இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை கட்டுப்படுத்த, ஆயுதமேந்திய போராட்டத்தை தேர்வு செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 2009ம் ஆண்டு வரை நடந்த ஈழப்போரில், இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழப்போரின் உச்சகட்டத்தின்போது, இலங்கையில் இருந்த தமிழ் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதலை எதிர்கொண்டு உயிரைவிட்டனர். எஞ்சிய தமிழர்கள் ஈழத்தில் இருந்து இன்றளவும் தமிழகத்தில் அகதியாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இலங்கையில் போர் நடைபெற்று பல ஆண்டுகள் கடந்திருப்பினும், பல தமிழர்களின் மனதில் போரில் செத்து மடிந்த தமிழ் உறவினர்களின் கதறல் இன்றளவும் ஒலித்து வருவதால், அதுசார்ந்த தாக்கம் தொடர்ந்து வருகிறது. இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை தொடங்கி, 2009ம் ஆண்டு வரை நடத்தி வந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். IND Vs AUS T20I: 9 பந்துகளில் ஆசியை தெறிக்கவிட்ட ரிங்கு சிங்: பவுண்டரி, சிக்ஸர் மழையால் பதறிப்போன ஆஸ்திரேலியா.! 

MDMK Vaiko Celebrates Prabhakaran Birthday (Photo Credit: @ANI X)

இவர் வழிநடத்தி வந்த விடுதலை புலிகள் இயக்கமே, இலங்கை அரசுக்கு எதிராக பல தாக்குதல்களை முன்னெடுத்தது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளால் பயங்கரவாதத்தின் இயக்கத்ததலைவராகவும் அறிவிக்கப்பட்டார். 2009 போரில் அவரும் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசு செய்திகள் வெளியிட்டன.

அவரின் பிறந்தநாள் நவம்பர் 26ம் தேதி தமிழ்தேசியவாத எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியுலகுக்கு வருவார் எனவும் செய்திகள் வெளியாகின.

இந்த தகவல் ஒட்டுமொத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சமீபத்தில் பொருளாதார சிக்கலில் தவித்து, இலங்கையில் தமிழர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் அந்நாட்டை விட்டு வெளியேறும் சூழல் வந்ததைத்தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து பிரபாகரனின் நெருங்கிய தொடரில் இருந்தோர் இத்தகவலை வெளியிட தொங்கினார்.

இந்நிலையில், நேற்று பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி கேக்வெட்டி கொண்டாடிய மதிமுக மூத்த தலைவர் வைகோ, "பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் பொய்சொல்ல மாட்டார்கள். அவர் மீண்டும் வரவேண்டும்" என தெரிவித்தார்.