Vaiko Admitted on Apollo Hospital (Photo Credit: Wikipedia / @Apollo_Chennai X)

நவம்பர் 14, சென்னை (Chennai News): தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவராகவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் கலிங்கப்பட்டி வையாபுரி கோபாலகிருஷ்ணன் என்ற வைகோ (Vaiko). இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவரின் வலது தோள்பட்டை காயம் காரணமாக, 2 நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வருகிறார். Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை ஒரேநாளில் ரூ.880 குறைவு; நகைப்பிரியர்களுக்கு உற்சாக செய்தி.! 

2 நாட்களில் வீடு திரும்புவார்:

வைகோ சில நாட்களுக்கு முன்னதாக கீழே விழுந்ததாகவும், அதனால் அவரின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரியவரும் நிலையில், அவருக்கு அது சம்பந்தமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் மீண்டும் சிகிச்சையில் இருக்கிறார். இதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், 2 நாட்களில் அவர் வீடுதிரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.