La. Ganesan (Photo Credit: @HrajaBJP X)

ஆகஸ்ட் 08, ராஜா அண்ணாமலைபுரம் (Chennai News): தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநிலத்தின் ஆளுநருமானவர் இல. கணேசன். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தவர், சென்னை தியாகராஜ நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். இதனிடையே, இன்று காலை வீட்டிலிருந்த இல. கணேசன் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினரால் மீட்கப்பட்ட இல. கணேசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். வானிலை: காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

மருத்துவமனையில் அனுமதி (La Ganesan Admitted in Chennai Apollo Hospitals):

அவர் எப்படி கீழே விழுந்தார்? காயம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்த மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன. தமிழக அரசியலில் மூத்த தலைவராக கவனிக்கப்படும் இல. கணேசன் தற்போது 80 வயதுடையவர் ஆவார். வயது மூப்பு காரணமாக திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தாரா? என்ன நடந்தது என தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்காயத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை நடப்பதாகவும், மயக்க நிலையில் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்ய சபா எம்.பி., மணிப்பூர், மேற்குவங்கம் மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி வந்த இல. கணேசன் அலுவல் பணிகள் குறைவாக இருக்கும்போது தமிழகம் வந்துசெல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மூத்த பாஜக தலைவர்கள் வந்தாலும் தமிழகம் வந்துவிடுவார். இதனிடையே, அவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.