PM Narendra Modi (Photo Credit: @ANI X)

டிசம்பர் 03 , தலைமை செயலகம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் (Fengal Puyal), விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெரும் மழையை சந்தித்துள்ளன. சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையாற்றில் (Then Pennai River) உச்சபட்ச வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கின. தற்போது படிப்படியாக நீர் வடிந்து வருகிறது.

முதல்வர் ஆய்வு & நிவாரண பணிகள்:

இதனிடையே, வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய, மாநில மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசின் சார்பில் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin) வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), மூத்த அமைச்சர்களுக்கு மாவட்டங்கள் பிரித்து வழங்கப்பட்டு மீட்புப்பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,040/- க்கு விற்பனை.! 

பிரதமர் (PM Modi Talks With TN CM MK Stalin) புயல் வெள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்:

இந்நிலையில், புயல்-வெள்ளம் விபரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் (PM Modi Conversation with CM Stalin) முக ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரித்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார். நேற்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், புயல் பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிக்காக ரூ.2000 கோடி நிதி கேட்டு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது முதல்வரிடம் பிரதமர் புயல் பாதிப்புகள் குறித்து விசாரித்து இருக்கிறார்.

விரைவில் மத்திய குழு தமிழகம் வருகை?

ஏற்கனவே மத்தியக்குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமிழகத்திற்கு வந்து புயல் சேதம் குறித்த அறிக்கையை வழங்குவார்கள். இதன்பேரில் மத்திய அரசு உடனடி நிதியை விடுவித்து உத்தரவிடும். இது தொடர்பாகவும் பிரதமர் - முதல்வர் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.