PM Narendra Modi Road Show (Photo Credit : Youtube)

ஜூலை 27, திருச்சி (Trichy News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தந்து ரூ.451 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.4800 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களை மக்களுக்கு தொடங்கி வைத்தவர், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இரவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்த நிலையில், பிரதமரும் எடப்பாடி பழனிச்சாமியும் ஆலோசனை மேற்கொண்டனர். கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி சோகம்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு.! 

தமிழரின் பாரம்பரிய உடையில் பிரதமர் நரேந்திர மோடி :

அதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மேல் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில் ரோடு ஷோ நடத்திவிட்டு ஹெலிகாப்டர் உதவியுடன் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார். இராஜேந்திர சோழனின் பெருமைகளை பறைசாற்றவும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் அமைக்கப்பட்டதன் 1000 ஆண்டு நினைவு விழா மற்றும் திருவாதிரை நாளை முன்னிட்டு சோழனின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமருடன் ஆளுநர் ரவியும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ :