Lord Murugan | PM Narendra Modi (Photo Credit: @Avvaitweets / @Narendramodi X)

பிப்ரவரி 11, புதுடெல்லி (New Delhi): உலகத்தமிழர்கள் பெருவாரியாக சிறப்பிக்கும் தைப்பூசம் 2025 பண்டிகை, இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய நாளில் முருகனின் அறுபடை வீடுகள் உட்பட பிற கோவில்களில், முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை என களைகட்டுகிறது. 48 நாட்கள் விரதம் இருக்கும் முருக பக்தர்கள், இன்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றுக்கு நடைபயணமாக சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, தைப்பூசம் பழனியில் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் சகலமும் கைகூடும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கை ஆகும். Vadapalani Murugan Temple: அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.. மணிக்கணக்கில் வடபழனி முருகனை நோக்கி காத்திருக்கும் பக்தர்கள்.! 

தைப்பூசம் வாழ்த்து (Thaipusam Wishes):

இந்நிலையில், உலகத்தமிழர்கள் கொண்டாடும் தைப்பூச திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இந்த எக்ஸ் வலைப்பதிவில், "அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தைப்பூசம் வாழ்த்து: