
ஜூன் 05, தைலாபுரம் (Viluppuram News Today): தமிழக அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் (Pattali Makkal Katchi PMK) இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணிக்கு (Anbumani Ramadoss) தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அக்கட்சியின் தலைவராக நீண்ட ஆண்டுகள் வழிநடத்திய ஜிகே மணி (GK Mani) செயல் தலைவராக அறிவிக்கப்பட்டு கட்சிப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். இதனிடையே, கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் (PMK Ramadoss), - தலைவர் அன்புமணிக்கு இடையே இளைஞரணி தலைவர் நியமனம் குறித்து பிரச்சனை ஏற்பட்டது. கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம் தமிழ்குமரன், முகுந்தன் என அடுத்தடுத்து இருவர் நியமனம் செய்யப்பட்டும் பலனில்லை. முகுந்தன் இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு அன்புமணி நேரடி எதிர்ப்பு தெரிவித்தார். Madurai News: கடன் பிரச்சனையால் தம்பதிகளின் உயிரே போச்சு.. கழுத்தை நெரித்த கடனால் விபரீதம்.!
முடிவுக்கு வருகிறது பிரச்சனை?
இந்த விஷயம் முதலில் பனிப்போர் போல தொடங்கினாலும், பின் ராமதாஸ் Vs அன்புமணி (PMK Ramadoss Vs Anbumani) என்ற சூழல் உருவாகியது. கட்சியில் அன்புமணிக்கு நெருக்கமாக இருந்த பல நிர்வாகிகளை நீக்கி நிறுவனர் பொறுப்பில் இருந்த ராமதாஸ் உத்தரவிட்டார். கூடுதலாக பாமக தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணியையும் பதவியில் இருந்து நீக்கி, தன்னையே தலைவராக அறிவித்துக்கொண்டார். ஆனால், பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நானே தலைவர் என அன்புமணி கூறினார். மாவட்ட செயலாளர்கள் உட்பட பாமக நிர்வாகிகள் பெரும்பாலானோர் அன்புமணிக்கு வெளிப்படை ஆதரவையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 5) பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு குறித்து பேசி முடிக்கப்பட்டு மாலைக்குள் தங்களின் முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.