MK Stalin Kolathur Visit (Photo Credit: @ANI / @MKStalin X)

செப்டம்பர் 24, கொளத்தூர் (Chennai News): தமிழ்நாடு அரசை தொடர்ந்து 3 வது ஆண்டாக வழிநடத்தி வரும் திமுக சார்பில், அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் (MK Stalin), தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை கவனித்து வருகிறார். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, தற்போது வரை துணை முதல்வர் பொறுப்பு என்பது யாருக்கும் வழங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியின்போது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வர் பொறுப்பு ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

வலுக்கும் துணை முதல்வர் உதயநிதி (Udhayanidhi Stalin) கோரிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வரின் ஆட்சிக்காலத்தில் துணை முதல்வர், மேயர் என பல ஆட்சி அதிகார பொறுப்புகளை ஏற்று, கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் முதல்வராகிய நிலையில், துணை முதல்வர் பொறுப்பு வழங்காதது அரசியலில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றது. இதனிடையே, திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வர் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தது. Praggnanandhaa: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்; சென்னை வந்தடைந்த ப்ரக்யானந்தா, வைஷாலி, குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.! 

தொண்டர்களுக்கு ஏமாற்றம்:

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றுவந்த முதல்வர் ஸ்டாலின், பவள விழாவில் துணை முதல்வர் தொடர்பான கோரிக்கை ஒலித்ததால் மறுநாளே அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையும் மேற்கொண்டு இருந்தார். இதனால் எப்போது வேண்டுமானாலும் உதயநிதியின் துணை முதல்வர் பொறுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரவாரத்துடன் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாற்றம் உறுதி - மு.க ஸ்டாலின்:

இந்நிலையில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற அரசுப்பணிகள் & திட்டங்களை ஆய்வு செய்த முதல்வர், ஜி.கே.எம் தொடக்கப்பள்ளியை திறந்துவைத்து, மாணவ - மாணவிகளுக்கு புத்தகப்பையை வழங்கினார். மேலும், பல நலத்திட்ட பணிகளையும் கொளத்தூரில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்வர் பேசுகையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்ட்டன. இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், "அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என தெரிவித்தார். இதனால் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அதில் துணை முதல்வர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படுமா? அமைச்சர்கள் யார் மாற்றப்படுவார்? என உறுதிபட தெரியவில்லை. இது மீண்டும் உதயநிதி - துணை முதல்வர் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.