மார்ச் 06, புதுடெல்லி (New Delhi): 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் 60 நாட்களுக்குள் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆளும்கட்சியாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் தனது சார்பு காட்சிகளை இணைத்து தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒருங்கிணைந்த இந்திய வளர்ச்சி கூட்டணி என்ற பெயரில் (I.N.D.I.A) கட்சிகள் ஒருங்கிணைக்கப்ட்டுள்ளது. Pondicherry Minor Girl Rape & Kill Case: புதுச்சேரி சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரம்.. குற்றவாளியை சுட்டுவீழ்த்த பெண் தயாரிப்பாளர் கோரிக்கை.!
விறுவிறுப்பாகும் அரசியல்களம்: இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விறுவிறுப்புடன் இறுதிக்கட்ட பிரச்சார பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல்கட்சியின் கூட்டணி தொகுதி பங்கீடு, கட்சித்தாவல் என அரசியல் பரபரப்பு களம் சூடேறி இருக்கிறது. Meta Down Loss: 3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்த மெட்டா; தொழில்நுட்ப கோளாறால் இழப்பு.!
ராகுல் காந்திக்கு அறிவுறுத்தல்: இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. அதாவது, பிரச்சார பயணங்களின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்கள் விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் தனது கருத்தை முன்வைத்து இருந்தது. அதனை மேற்கோளிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், எதிர்காலத்தில் கவனமாக மற்றும் எச்சரிக்கையாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.