பயத்தின் உச்சத்தில் முதல்வர்? அரசியலில் அதிரடி திருப்பம்.. தமிழிசை கடும் தாக்கு..!
பலம் பொருந்திய பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் தினமும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவர்கள் மக்களின் மனதை மாற்ற முயற்சிக்கின்றனர் என தமிழிசை காட்டமாக பதில் அளித்தார்.
மே 3, கமலாலயம் (Chennai News): தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். இந்த விஷயத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்திப்பில் தனது கருத்துக்களையும் முன்வைத்தார். இது தொடர்பான பேட்டியில் அவர் கூறியதாவது," மக்கள் போராட்டம் செய்யும்போது முதல்வருக்கு பாராட்டு விழா நடக்கிறது. வெறும் விளம்பரம் கொண்ட ஆட்சியாக திமுக இருக்கிறது.
உங்க கொள்கை என்னாச்சு?
விளம்பரத்துக்காக அதிகம் செலவு செய்யபடுகிறது. மாநிலத்தில் மக்கள் மற்றும் அரசு அமைப்புகள் சார்பில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முதல்வருக்கு ஒன்றுமே தெரியாதது போல, அவருக்கு என பாராட்டு செய்கிறார்கள். என்ன செய்துவிட்டார் அவர்?. மாநில சுயாட்சி மீட்டவர் என பாராட்டுகிறார்கள். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என கூறிவிட்டு இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் மாநில உரிமை மீட்டவராக பாராட்டு ஏற்கலாமா?. அதிமுகவை பாஜக வற்புறுத்தி கூட்டணி வைத்தாக சொல்கிறார்கள். உங்களின் ஆட்சியை கலைந்தது காங்கிரஸ். எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைத்தது காங்கிரஸ். Virudhunagar News: காதல் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. கொன்று கிணற்றில் வீசிய மகன்.!
சிபிஎஸ்சி விவகாரம் - தமிழிசை பதில் :
அதுமட்டுமா? இலங்கையில் தமிழ் சொந்தங்களை கொன்று குவித்தது காங்கிரஸ். இப்படிபட்ட காங்கிரசுடன் கூட்டணி வைத்து திமுக. அதிமுக - பாஜக கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு பயம். அவர்கள் எந்த அழுத்தத்துடன் காங்கிரசுடன் கூட்டணிக்கு உடன்பட்டார்கள்?. சிபி எஸ்இ தேர்வில் 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்கும். மாணவர்கள் பெயில் ஆகிவிட்டாலும் 2 மாதத்தில் சிறப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்டு, திரும்பி தேர்வு வைக்கப்பட்டும். எந்த தமிழக மாணவரும் 2 மாத சிறப்பு பயிற்சிக்கு பின் பெயில் ஆகமாட்டார்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 மார்க் பாஸ். 30 கூட எடுக்க முடியவில்லை என்றால் எப்படி?. தமிழகத்தில் பாஸ் மார்க் 35. 5, 8ல் தோல்வி அடையாத மாணவர் தேர்ச்சி ஆகி 9ல் தோல்வி அடைந்தால் பிரச்சனை இல்லையா?. பெயில் ஆகுவார்கள் என சொல்பவர்கள், சிறப்பு வகுப்பை பற்றி ஏன் பேசுவதில்லை?. பொய்யான தகவலை தமிழக அரசு பரப்ப கூடாது" என பேசினார்.
(The above story first appeared on LatestLY on May 04, 2025 09:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

