![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/ntk-seethalakshmi-vc-chandirasekar-photo-credit-manoj39150-naamtamilarorg-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 08, சித்தோடு (Erode News): ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் மறைவுக்குப்பின், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 2023 இடைத்தேர்தலில் வெற்றி அடைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan) உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த காரணத்தால், இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது.
சந்திரகுமார் திமுக வேட்பாளர்:
இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் என்பது இருக்காது என குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் பங்கேற்கவில்லை. ஆளும் கட்சியான திமுக காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை கூட்டணிக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்வசப்படுத்தி, தேமுதிகவில் 2011 காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பின் அரசியல் காரணத்தால் திமுகவில் இணைந்த விசி சந்திரகுமார்-க்கு (V.C. Chandhirakumar) பொறுப்பு வழங்கி, அவரை திமுக வேட்பாளராக களமிறக்கி இருந்தது. வானிலை: சுட்டெரிக்கப்போகும் வெயில்., தவிக்கப்போகும் தமிழகம்.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!
சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்:
மறுமுனையில் 40 க்கும் அதிகமான சுயேச்சை உட்பட பிற வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தாலும், முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சி மட்டும் இடைத்தேர்தலில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி (NTK Seethalatsumi) நியமனம் செய்யப்பட்டார். சந்திரகுமாரை ஆதரித்து திமுக அமைச்சர் முத்துசாமி நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றினார். சீதாலெட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தீவிர களப்பிரச்சாரம்:
இடைத்தேர்தல் என்றாலே பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் வெற்றி அடையும் என்பது பலருக்கும் அறிந்த விஷயம் என்றாலும், மக்களின் மனநிலையை பொறுத்து அது மாறுபடும். திமுகவின் வெற்றிக்கு எனது சாதனைகளே காரணமாக அமையட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டு, களப்பிரச்சாரத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களின் வாக்குசேகரிப்பு பணியை மேற்கொண்டு இருந்தனர். Vellore: சீட்டு பணத்தை கேட்ட இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025 (Erode East By Election Results 2025):
இன்று 08 பிப்ரவரி 2025 தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், தபால் ஓட்டுகளில் தொடங்கி தொடர்ந்து திமுக முன்னிலை பெற்றது. மொத்தமாக 2,27,546 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டு, 1,54,657 பேர் தேர்தல் அன்று வாக்களித்து இருந்தனர். வாக்குகளின் எண்ணிக்கையில் இருந்து திமுக தொடர்ந்து முன்னிலை வகித்தது. இறுதியில் திமுக வேட்பாளர் 117158 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் 93286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.
திமுக வேட்பாளர் 73% வாக்குகள் பெற்று வெற்றி:
பதிவான மொத்த வாக்குகளில் 73.99% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி அடைந்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தோல்வி அடைந்தாலும், 23872 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2023 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10827 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாக மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வெற்றி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக வெற்றிக்கு அச்சாரமிட்டுள்ளது என திமுகவும், மக்களின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாற்றத்தை தரும் நிலையை உணர்த்துகிறது என நாதக நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை தந்துவிடாது எனினும், எதிர்வரும் தேர்தலில் வரும் நிலையை முன்கூட்டியே ஊகிக்க உதவும். மக்கள் மனநிலையும் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் அரசுக்கு ஆதரவான நிலையே இருக்கும். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்பது என்ன என இன்னும் சில மாதங்களில் தெரியவந்துவிடும் என்பதால் காத்திருப்போம்.