ஜூலை 03, சென்னை (Politics News): கடந்த 29 ஜூன் 2023 அன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் சமூக நீதிக்காக போராடி வெற்றி அடைவது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம்.
திரைப்படத்தின் வெளியீடுக்கு முன்பு படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில், மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கள் தென்மாவட்டத்தில் லேசான சலசலப்பை உண்டாக்க, மீண்டும் தேவேந்திரர் - தேவர் மோதல் சம்பவங்கள் நடக்கலாம் என பல இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பு, வசூலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அன்று தேவர்களும் - தேவேந்திரர்களும் சண்டையிட்டு இரத்த ஆறாக ஓடும்போது ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லையே. இன்று அண்ணன் - தம்பியாக அனைவரும் பழகும்போது, மீண்டும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்படிப்பட்டவை?. நான் தேவர் மகன் திரைப்படத்தை எதிர்க்கவில்லை. Karnataka Suicide: ஆன்லைன் கேமில் ரூ.65 இலட்சம் இழந்ததால் சோகம்; கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்த பரிதாபம்.. கண்ணீரில் மனைவி.!
அந்த படத்தில் உள்ள பாடலை நான் எதிர்த்தேன். நீங்கள் தேவர் என்றால் உங்களின் வீடுகளில் பெருமையை பேசுங்கள், அதில் யாரும் தலையிடப்போவதில்லை. மாறாக திரையில் அதை வைக்க வேண்டாம் என பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அந்த பாடல் மற்றொரு சமூகத்தின் இடத்தில் பதிவிடுவது பிரச்சனையை தரும் என்று கூறினேன். சண்டியர் என்ற படத்தலைப்பு வணிக ரீதியாக கொண்டு வரப்பட்டது. மதுரைக்கு நான் எப்போதும் தமிழ்நாடு ஓட்டலில் தங்குவேன்.
அந்த சுவருக்கு அருகே பெரிய அரிவாளுடன் இரத்தம் சொட்டச்சொட்ட சண்டியர் என எழுதி இருந்தார்கள். யாரின் இரத்தம் அங்கு சொட்டுகிறது?. அதனால் தான் அதனையும் எதிர்த்தேன். பெயரை மாற்றவே நான் வலியுறுத்தினேன். அன்றைய காலத்தில் படத்தினால் எவ்வுளவு வன்முறைகள் நடந்தது. நான் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் சுந்தரலிங்கனாருக்கு போராட்டம் நடத்தியபோது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சங்கரன்கோவில் தேசிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50 பேரை கைது செய்து நிலக்கோட்டை சிறைக்கு அழைத்து வந்தார்கள்.
அப்போது, அவர்களின் தலைமுடியை இரண்டு பெண்களை சேர்த்து கயிறால் கட்டி அழைத்து வந்தார்கள். இது எவ்வுளவு பெரிய மனித உரிமை மீறல். எத்தனை படத்தில் அதனை காண்பித்தார்கள். கொடியன்குளம் கிணற்றில் பால்டாயில் ஊற்றினார்கள். அதனை எத்தனை படத்தில் காண்பித்தார்கள். 30 - 40 ஆண்டுகள் கழித்தபின் படம் எடுத்துவிட்டு நான் பெரிய நாயகன் என்று சொல்வதில் என்ன பெருமை?. அன்று நீங்கள் எங்கே சென்றீர்கள்?. செத்த பாம்பை எதனால் அடிக்கிறீர்கள்?. மதுஒழிப்பு போராட்டம், இரட்டைக்குவளை முறை ஒழிப்பு என பல போராட்டம் நடத்தி இருக்கிறோம். Speeding Car Accident: திரைப்பட பாணியில் பாலத்தில் பறந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; அதிவேகத்தில் பயங்கரம்.!
கிராமங்களில் நடக்கும் பல வளர்ச்சிக்கான போராட்டங்களை எதனால் திரையில் காண்பிப்பது இல்லை. பாரதிராஜாவின் மகன் படத்தில் திருப்பாச்சி அரிவாளை எடுத்துவிட்டு வாடா வாடா என பாடல் இருந்தது. அதையும் நான் எதிர்த்தேன். சொந்த ஜாதிக்குள் அடித்து மாண்டாலும், அங்கு இரத்தம் சிந்துபவர் யார்?. அப்பாவி மனிதன்தானே. எந்த இயக்குனராலும் தென் தமிழகத்தில் அமைதி கொண்டுவரப்படவில்லை. நாங்கள் போராடி அமைதியை கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் அடிவாங்கி, மிதிவாங்கி அமைதியை கொண்டு வந்துள்ளோம். ஒருகாலத்தில் தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் பேருந்தில் பயணிக்கும்போது, மற்றொரு சமூகத்தினர் பயணித்து இடம் இல்லை என்றால், அவருக்கு எழுந்து இடம்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேவேந்திரர் சமூக பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் போராடி நாங்கள் சகோதரத்துவத்துடன் இருக்க மாற்றி இருக்கிறோம். Trending Video: அடேங்கப்பா.. குடும்பமாக கால்பந்தாட்டம் விளையாடி மகிழும் பிரேசில் மக்கள்.. அசத்தல் வீடியோ வைரல்..!
சட்டம் அனைவர்க்கும் பொதுவானது. தேவேந்திரர் - தேவர் சண்டையில் யாரோ ஒரு இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் என ஒரு நபர் முயற்சித்து சண்டையை பேசி தீர்த்திருக்கலாமே. ஏன் அதனை நீங்கள் செய்வது இல்லை?. பல தேசிய விருதுகளை வாங்கியோர் இருந்து என்ன பயன்?. திரைப்படங்கள் இன்றளவில் அரசியல் வளர்ச்சிக்கு பயன்பட தொடங்கிவிட்டது. மக்கள் வளர்ச்சிக்கு பயன்படுவது இல்லை. சாதி ஒழிய வேண்டும் என எம்.ஜி.ஆரும் பேசினார். ஆனால், ஜாதி ஒழிந்ததா?. படங்கள் வீண் சண்டைகளை வளர்த்து விடுகிறது.
படங்கள் பாடங்களாக வரும் போது நாங்கள் பாராட்டுகிறோம். அதுவே சண்டையினை ஏற்படுத்தினால் கட்டாயம் எதிர்ப்போம். தெந்தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்றால், அதற்கு முழு காரணம் நாங்கள் செய்த தியாகமே. எந்த அரசியல் கட்சியும் அதற்கு காரணம் இல்லை. எனது போராட்டங்கள் அடிப்படையில் இருந்து சமூக மாற்றங்களை கொண்டு வருபவை. தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்நிலையும் இருக்க கூடாது" என கூறினார்.