Tourist Submarine Accident: சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. கடலில் மூழ்கி 6 பேர் பரிதாப பலி..!

எகிப்தின் செங்கடலில் 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tourist Submarine Accident: சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. கடலில் மூழ்கி 6 பேர் பரிதாப பலி..!
Tourist Submarine Accident (Photo Credit: @uaehr298 X)

மார்ச் 28, கெய்ரோ (World News): வடக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் (Egypt), செங்கடலில் உள்ள ஹர்கடா (Hurghada) கடற்கரையில் சிந்துபாத் என்னும் நீர்மூழ்கிக் கப்பல் (Submarine), சுமார் 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. துறைமுகம் அருகே செல்லும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் 6 பேர் பலியானதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். Tariff On Cars: வெளிநாட்டு கார்களுக்கு 25% வரி விதிப்பு; அதிபர் டிரம்ப் அதிரடி..!

நீர்மூழ்கி கப்பல் விபத்து:

ஹுர்காடா பகுதி உலகப் பிரசித்தமான டைவிங் மையம் ஆகும். இங்கு விபத்து ஏற்பட்டதற்கான விரிவான விசாரணை நடந்து வருகின்றன. எகிப்திய கடல் படை மற்றும் மீட்பு படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு அல்லது ஆக்சிஜன் கசிவு காரணமாக கப்பல் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சர்வதேச நீர்மூழ்கி மீட்பு குழுக்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).